வானத்தில் இருந்து விழுந்த மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி !

வேலூர் மாவட்டம் நாட்ரம் பள்ளியில் தனியார் பொறியியல் கல்லூரி இன்று காலையில் மர்ம பொருள் ஒன்று விழுந்து வெடித்து சிதறியது. இந்த வெடி விபத்தில் கல்லூரியின் பேருந்து ஓட்டுநர் காமராஜ் உயிரிழந்தார்.
வானத்தில் இருந்து விழுந்த மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி !
3 பேர் படுகாயங்க ளுடன் மருத்துவ மனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப் பட்டுள் ளனர். டிரைவர் காமராஜ், வெள்ளேரி பட்டு நாட்றம் பள்ளி வட்டம் பகுதியை சேர்ந்தவர்.

தற்காலிக ஓட்டு னராக கல்லூரியில் பணி புரிந்து வந்தார். இன்று பணியின் போது கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் உள்ள 

தண்ணீர் தொட்டியில் முகம் கழுவ சென்ற போது பலத்த சத்தத் துடன் மர்மப் பொருள் வெடித்தது. இதில் டிரைவர் ரத்த வெள்ள த்தில் கிடந்தார். 

சத்தம் கேட்டு கல்லூரி வளாகத் தில் இருந்த சக ஊழியர்கள் டிரைவரை மீட்டு சிகிச்சைக் காக வாணியம் பாடி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி காமராஜ் உயிரி ழந்தார். 

இவ்விப த்தில் மேலும் நால்வர் காய மடைந்துள்ள தாக அங்கிருந்து வந்துள்ள தகவல்கள் தெரிவிக் கின்றன. விபத்துக் கான காரணம் குறித்து நாட்ரம் பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண் டுள்ளனர்.

வானத்தில் இருந்து மர்மப் பொருள் ஒன்று வெடித்து சிதறியதில் பொறியியல் கல்லூரி வளாகத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. 

பேருந்தின் கண்ணாடிகள் அதிர்ச்சியில் நொறுங்கியுள்ளன. சம்பவ இடத்திற்கு திருப்பத்தூர் வட்டா ச்சியர் ஆய்வு மேற்கொண் டுள்ளார்.
செய்தியாளரிடம் பேசிய வட்டாச் சியர் செல்வராஜ், வெடித்த பொருள் என்ன என்பது பற்றி ஆய்வு செய்ய குழுவினர் வந்து கொண்டிருப் பதாகவும், 

சம்பவத்தில் காயமடைந்த தோட்டப் பணியாளர்கள் 3 பேரும் திருப்பத்தூர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவ தாகவும் தெரிவித்தார். 

இதனிடையே சம்பவம் நடந்த தனியார் கல்லூரியில் அமைச்சர் வீரமணி ஆய்வு மேற்கொண் டுள்ளார். வெடி விபத்து குறித்து வட்டாச் சியரிடம் விபரம் கேட்டறி ந்தார்.
Tags: