சவுதி மாணவன் செய்த பார்வை மூலம் இயங்கும் நாற்காலி !

மலேசியா வின் தலைநகர் கோலாலம் பூரில் நடைபெற்ற கண்டு பிடிப்புகளுக்கான சர்வதேச ITEX கண்காட்சியில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த,
சவுதி மாணவன் செய்த பார்வை மூலம் இயங்கும் நாற்காலி !
உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் அலி முஹம்மத் ஹத்தாத் (17 வயது) என்ற மாணவன், பார்வையின் மூலம் இயங்கும் சக்கர நாற்காலி ஒன்றைக் கண்டு பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளான். 

கை, கால்கள் முடமான அங்க வீனர்களுக்கு இலேசு படுத்தும் நோக்கில், அங்கவீனர்களால் பயன் படுத்தப் படும் சக்கர நாற்காலிகளில் இந்த வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது.

இக்கண்டு பிடிப்பு பற்றி மேலும் தெரிய வருவ தாவது, இச்சக்கர நாற்காலி களில் ஒரு திரை பொருத் தப்பட்டிரு க்கும். அது சில BUTTON களைக் கொண்டி ருக்கும்.
அந்த BUTTON களை தொடர்ந்து மூன்று செக்கன்களுக்கு பார்ப்பதன் மூலம் முன் செல்லல், திரும் புதல், சுற்றுதல் நிறுத்துதல் போன்ற கட்டளை களை செயற் படுத்த முடியும் எனக் கூறப்ப டுகிறது.

இது தவிர இன்னும் பல வசதிகளும் அதில் இணைக்கப் பட்டுள்ளன. மலேசியாவில் நடைபெற்ற இக்கண் காட்சியில் சவுதி அரேபியா 8 பதக்கங் களை வென்றது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
Tags: