சினிமாவிலும் கமலுக்கு மகளாகின்றார் ஸ்ருதி !





சினிமாவிலும் கமலுக்கு மகளாகின்றார் ஸ்ருதி !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
வாய்ப்புக் கிடை த்தால் கமல் ஹாஸ னுடன் இணைந்து நடிப்பேன் என்று சொல்லிக் கொம் டிருந்த ஸ்ருதி ஹாஸனின் ஆசை ஒரு வழியாக நிறைவேறி விட்டது.
சினிமாவிலும் கமலுக்கு மகளாகின்றார் ஸ்ருதி !
கமல் நடிக்கும் மலையாளப் படம் ஒன்றில் அவருக்கு மகளாகவே நடிக்கிறார் ஸ்ருதி ஹாஸன். 

கமல் ஹாஸன் நாடறிந்த நடிகர் என்றால், அவர் மகள் ஸ்ருதி ஹாஸனோ நாட்டின் முன்னணி நாயகிகளில் ஒருவர். 

தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் இவருக்கு நல்ல மார்க்கெட்.கடந்த சில வருடங்களாகவே அப்பா கமலுடன் படத்தில் இணைந்து நடிப்பீர்களா? எனப் பத்திரிகை யாளர்கள் ஸ்ருதியைக் கேட்டு வருகின்றனர். 

அதற்கு அவர், அப்பா மிகப்பெரிய நடிகர். அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, என்று கூறி வந்தார்.
நேற்றும் அப்படி ஒரு கேள்வி எழுந்தபோது ஸ்ருதி கூறுகை யில், வீட்டில் இருக்கும் போது அப்பாவுடன் நடிப்பு ஒத்திகை பார்த்தி ருக்கிறேன். 

நடனம் கூட இணைந்து ஆடி இருக் கிறேன். அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. இப்போது அந்த வாய்ப்பு அமைந்துள்ளது, என்றார். 

கமல் நடிக்கும் புதிய படத்தை மலையாள இயக்குநர் சஞ்சீவ் குமார் இயக் குகிறார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசனும் நடிக்கிறார். 
இதில் கமல் மகளாகவே ஸ்ருதி ஹாசன் நடிக்கிறா ராம். ஸ்ருதி ஹாஸன் இன்றைய திகதிக்கு கமல் ஹாஸனை விடப் பிஸி. தமிழ், தெலுங்கு, இந்தியில் தலா இரு படங்களை ஒப்புக் கொண் டுள்ளார்.
Tags: