மழை வெள்ளத்தில் சிக்கிய அபிஷேக் பச்சன்! - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

Flash News

மழை வெள்ளத்தில் சிக்கிய அபிஷேக் பச்சன்!

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...
சென்னையில் நேற்று ஒரே நாளில் பெய்த பலத்த மழையால், மொத்த நகரமும் ஸ்தம்பித்தது. வரலாறு காணாத இந்த மழையால், பஸ், ரெயில், விமானப்போக்குவரத்து அனைத்தும் முடங்கின.
இந்த நிலையில் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் நேற்று முன்தினம் சென்னையில் மோதின.

இந்த போட்டியை பார்ப்பதற்காக சென்னை அணியின் உரிமையாளர்களில் ஒருவரும், பிரபல இந்தி நடிகருமான அபிஷேக் பச்சன் சென்னை வந்திருந்தார். 

அப்போது அவர் மழை வெள்ளத்தில் சிக்கினார். எனினும் பத்திரமாக மும்பை திரும்பிய அவர் சென்னை மழை-வெள்ளம் குறித்து ‘சென்னை வெள்ளம்’ என்ற தலைப்பில் தனது ‘டுவிட்டர்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், ‘சென்னை வெள்ளத்தில் சிக்கிய என்னை பாதுகாத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது நான் பாதுகாப்பாக இருக்கிறேன். 

மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள சென்னை மக்களை நினைக்கவும், அவர்களுக்காக பிரார்த்திக்கவும் கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்து உள்ளார்.
Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close