30 விநாடிகளில் 108 தடவை ஸ்கிப்பிங் 11 வயது சென் – புதிய உலக சாதனை !

சீனாவைச் சேர்ந்த 11 வயது சென் ஸியாவோலின் மிகவும் வேகமாக ஸ்கிப்பிங் செய்யக்கூடியவர். அவா் ஸ்கிப்பிங் செய்யும் போது எண்ணுவதே கடினமாக இருக்கும். 


அவ்வளவு வேகமாக இருக்கும் . அண்மையில் சென் 30 விநாடிகளில் 108 தடவை ஸ்கிப்பிங் புதிய உலக சாதனையைப் படைதிருக்கிறார் . 

துபாயில் இடம்பெற்ற உலக சாம்பியன் ஸ்கிப்பிங் போட்டியில் கலந்துகொண்டு, விளையாடிய போது நடுவர்களின் கண்களுக்கு ஸ்கிப்பிங் கயிறே தெரியவில்லை. அவர்களால் எண்ணிக்கையைச் சொல்ல முடியவில்லை. 

வீடியோவை 8 முறை மெதுவாக ஓடவிட்டுப் பார்த்து, 30 நொடிகளில் 108 தடவை குதித்திருப்பதாக அறிவித்தார்கள். அதே போட்டிகளில் 3 நிமிடங்களில் 548 தடவை குதித்து மேலும் ஒரு புதிய சாதனையையும் சென் படைத்திருக்கிறார் . 

‘குவாங்ஸோவ் நகர் பாடசாலையில் படிக்கும் போது தினமும் ஒன்றரை மணித்தியாலம் பயிற்சி இருக்கும் எனவும்

தமது ஆசிரியர் 200 ஸ்கிப்பிங் வீடியோக்களைப் பார்த்து, புதிய ஸ்டைலை உருவாக்கியதாகவும் அவர் மூலம்தமது பாதடசாலை 28 தங்கப் பதக்கங்களைப் பறெ்றுள்ளதாக சென் தொிவித்துள்ளாா்.
Tags: