மொபைல் படங்களை எளிதில் பிரிண்ட் போடலாம் !

நம் கையில் ஸ்மார்ட் போன் வந்தநாள் முதலாகத் தினந்தோறும் எண்ணற்ற ஒளிப்படங்களை எடுக்கிறோம். ஓய்வு நேரங்களில் அவற்றை ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து சந்தோஷமடைகிறோம்.

 image

நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம். அவற்றில் சிலவற்றை பிரிண்ட் போட வேண்டும் என நினைக்கிறோம், ஆனால் அதற்கு நமக்கு நேரம் கிடைப்பதில்லை. இந்தச் சிக்கலுக்குத் தீர்வு தருகிறது மைக்ரோமேக்ஸ் நிறுவனம். 

தொடர்ந்து ஸ்மார்ட் போன்களையும் பிட்னெஸ் பேண்டுகளையும் தயாரித்து வெளியிட்ட இந்த நிறுவனம் ஒரு போர்ட்டபிள் பிரிண்டரை (Yu YuPix Compact Printer) இப்போது அறிமுகப்படுத்தியிருக்கிறது. டை சப்ளிமேஷன் என்னும் தொழில்நுட்பம் மூலம் இது போட்டோக்களை பிரிண்ட் செய்து தருகிறது. 

இந்த பிரிண்டரை ஆண்ட்ராய்டு போன்களிலும் ஐபோன்களிலும் இணைத்து பிரிண்ட் எடுத்துக்கொள்ள முடியும். பிரிண்டுக்குத் தேவையான போட்டோ பேப்பர், 

இங்க் ரிப்பன் ஆகியவை கொண்ட கேட்ரிட்ஜ் இதில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பாக்கெட் சைஸ் பிரிண்டரில் 60 விநாடிகளுக்குள் போட்டோவை பிரிண்ட் போட்டுவிடலாம். 


இதன் உள்ளே பொருத்தப்பட்டுள்ள வைஃபை, என்.எஃப்.சி தொழில்நுட்பம் பத்து மடங்கு வேகத்தில் படங்களை மொபைலிலிருந்து பிரிண்டருக்குக் கடத்திவிடும். 

3.4 அங்குலம் நீளம், 2.1 அங்குலம் அகலம் அளவிலான பத்து போட்டோக்கள்வரை தொடர்ந்து பிரிண்ட் போடலாம். 273 கிராம் எடை கொண்ட இந்த பிரிண்டருக்குத் தேவையான ஆற்றலை 750 எம்ஏஎச் சக்தி கொண்ட பேட்டரி ஒன்று வழங்குகிறது. 

 பிரிண்டரை போனுடன் இணைப்பதற்குத் தேவையான யூபிக்ஸ் ஆப்பையும் கூகுள் ஸ்டோரில் டவுண்லோடு செய்துகொள்ள முடியும். இந்த பிரிண்டரின் விலை ரூ.6,999. 

டால்பி ஆடியோ வசதி கொண்ட லாலிபாப் போன் 

எச்டிசி நிறுவனம் அதன் டிசையர் மாடல் ஸ்மார்ட் போன்களைத் தொடர்ந்து சீனாவில் அறிமுகப்படுத்திவருகிறது. அந்த வரிசையில் எச்டிசி டிசையர் 728 என்ற புதிய மாடல் போனை அது அறிமுகப்படுத்தியிருக்கிறது. 

இதன் விலை விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆன்லைனில் முன்னதாக ஆர்டர் எடுத்து செப்டம்பர் மத்தியில் கேண்ட்செட் நுகர்வோருக்கு அனுப்பப்படலாம் எனத் தெரிகிறது. 

 

இரட்டை சிம் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட் போனில் பூம்சவுண்ட் டெக்னாலஜி உதவியால் டால்பி வசதியில் ஒலிகளைக் கேட்கலாம். இதில் வைஃபை, ப்ளுடூத், எம்.எம். ரேடியோ போன்ற வழக்கமான வசதிகளும் உள்ளன. 

இதன் பிற அம்சங்கள்: 
 
திரை : 5.5 அங்குலம் எச்.டி. 

இயங்குதளம் : ஆண்ட்ராய்ட் 5.1.1 லாலிபாப் 

பின்பக்க கேமரா : எல்இடி ப்ளாஷ் வசதி கொண்ட 13 மெகா பிக்ஸல் 

முன்பக்க கேமரா : 8 மெகா பிக்ஸல் 

ராம் : 2 ஜி.பி 

சேமிப்புத் திறன் : 16ஜிபி (2 டிபி வரை அதிகரித்துக்கொள்ளலாம்) 

பேட்டரி : 2800எம்ஏஎச் 

எடை : 153 கிராம் 

Tags: