மழை - வெள்ள சேத தடுப்பு நடவடிக்கை.. தலைவர்கள் அதிருப்தி!

மழை சேதங்களைத் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என்று அதிருப்தி வெளியிட்ட கட்சித் தலைவர்கள், போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை முடுக்கிவிட வலியுறுத்தி யுள்ளனர்.
 கடலூரில் வெள்ளம் சூழந்த கிராமங்களில் மக்கள் அவதி. | படம்: எஸ்.எஸ்.குமார்
மேலும், கனமழைக்கு பலியானோர் குடும்பங்களுக்கும், பயிர் சேதங்களும் உரிய நிவாரண உதவிகளை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி: 

வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து எச்சரித்து வந்த நிலையில், அரசு என்ற ஒன்று இருந்தால் அந்த எச்சரிக்கையைப் புரிந்து கொண்டு தேவையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா? 

கோடநாட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்து விட்டு வந்தவுடன் 9 ஆம் தேதியன்றே தலைமைச் செயலகத்திற்கு வந்து மாநில மக்களின் நலன் - பாதுகாப்பு கருதி மழை, வெள்ளம் பற்றி அதிகாரிகளோடு விவாதித்திருக்க வேண்டாமா? 

புயல், மழை, வெள்ளத்தால் கடலூர், விழுப்புரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. நீலகிரி, ஏற்காடு, கொல்லிமலை பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 

 விழுப்புரம் மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்களும், 10 ஆயிரம் ஏக்கரில் நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களும் நீரில் மூழ்கி மிதக்கின்றன.

சென்னையில் முதல்வரின் ஆர்.கே.நகர் தொகுதியில் பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. ஆனால், மாநகராட்சி எந்த நடவடிக் கையும் எடுக்கவி ல்லை. 

மழை, வெள்ளப் பாதிப்புகளில் இருந்து மக்களைப் பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

பலியானோர் குடும்பங் களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். சேதமடைந்த பயிர்களுக்கு தகுந்த இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். 

மழை வெள்ளத்தின் தொடர்ச்சியாக, தொற்று நோய் பரவிட வாய்ப்புகள் அதிகம் என்பதால், டெங்கு பாதிக்கப்பட்டோர் பற்றிய பதிவுகளை ஆவணங் களிலிருந்து அகற்றியதைப்

போன்ற ஆபத்தான காரியங்களில் ஈடுபடாமல்; நோய்த் தடுப்பு நடவடிக் கைகளைத் திட்டமிட்டு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். 

தேமுதிக தலைவர் விஜயகாந்த்:
 
தமிழகத்தில் புயல் காரணமாக கனமழை கொட்டும், சூறாவளி காற்று வீசும், பலத்த சேதம் ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் பல நாட்களாக எச்சரித்தது.

எனினும், அரசின் மெத்தன போக்கால், கடலூர் மாவட்டத்தில் உயிரிழப்புகள் அதிகரித் துள்ளது. இயற்கையின் சீற்றத்தை தடுக்க முடியாது என்றாலும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுத்திருக்க வேண்டும்.

தற்போது நிவாரணம் வழங்குகிறேன் என்று கூறுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. சாலைகள் துண்டிக்கப்பட்டு, மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்து பேரழிவு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மக்கள் குடிநீர் மற்றும் உணவு இன்றி தவித்து வருகின்றனர். 

'தானே' புயல் பேரழிவை பார்த்த பின்பும் அரசு பாடம் கற்று கொள்ளவில்லை. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவர்கள் வாழ்ந்த பகுதிகளில் 10 பேர் உயிரிழந்துள்ளது பேரதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது. 

அவர்கள் வசித்த பகுதி தாழ்வாக இருப்பதையுணர்ந்து, அவர்களை மாவட்ட நிர்வாகம் உரிய நேரத்தில் வெளியேற்றி இருந்தால் இத்தகைய இழப்பை தடுத்தி ருக்கலாம்.

உண்மை யிலேயே மழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் அங்கே எவ்வித நிவாரணப் பணிகளும் நடைபெறுவதாக தெரியவில்லை. 

எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி தேவையான குடிநீர், உணவு, உடை, அத்தியாவசிய பொருட்கள் போன்ற வற்றை போர்க்கால அடிப்படை யில் வழங்க வேண்டும்.

மழை இன்னும் 2 நாட்கள் நீடிக்கும் என்று சொல்லப் படுவதால் அதற்கான முன்னெ ச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும், கன மழையால் கடலூரில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தேமுதிக சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.

இந்த தொகையை சிதம்பரத்தில் நடக்கவுள்ள தேமுதிக சார்பில் நடைபெறும் மக்களுக்காக மக்கள் பணி பொதுக்கூட்டத்தில் வழங்கப்படும். 

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்: 
 
கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி உள்ளிட்ட பல மாவட்ட ங்களில் வெள்ளப் பெருக்கு காரணமாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட் டள்ளது. 

கடலூர், பண்ருட்டி பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட வாழையும், கடலூர், சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் 1 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிரும் சேதமடைந்து விவசாயிகள் பெருத்த நட்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட் டுள்ளது. 

மழை வெள்ளத்தால் தமிழகத்தின் பல பகுதிகளில் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரி த்துள்ளது. கடலூர் மாவட்டமே வெள்ளத்தில் மிதந்து வருகிறது. 

நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தில் வெள்ளம் புகுந்ததால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இத்தகைய அசாதாரண வெள்ளச் சூழலை சந்திப்பதற்கு முன்னெ ச்சரிக்கை நடவடிக்கைகள்

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் எடுக்கப்படாத காரணத்தால் வரலாறு காணாத பாதிப்புகளை மக்கள் எதிர்நோக்க வேண்டிய நிலை உள்ளது. 

ஆறுகள், கால்வாய்கள், நதிகள் தூர் வாரப்படாத காரணத்தால் கனமழையை உள்வாங்க முடியாத நிலையில் வெள்ளம் பெருக்கெடுத்து விவசாயப் பயிர்களையும், குடியிருப்பு களையும் மிகப்பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தி யுள்ளது. 
 
தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை போர்க்கால அடிப்படையில் செய்வதற்கு தமிழக அரசு முற்றிலும் தவறிவிட்டது. 

கடலூர் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட தமிழக அமைச்சர் களையும், அதிகாரி களையும் பொதுமக்கள் முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தி யுள்ளனர்.

இந்நிலையை தமிழக அரசு உணர்ந்து உடனடி நடவடிக் கைகளை எடுக்க வில்லை யெனில் பாதிக்கப்பட்ட மக்கள் மிகப்பெரிய போராட்ட த்தை நடத்த வேண்டிய நிலை ஏற்படும். 

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்:
 
கடந்த இரு நாட்களாக பெய்த கன மழையால் சென்னை உள்ளிட்ட வட மாவட் டங்களும், காவிரி டெல்டா மாவட் டங்களும் மிகக்கடு மையாக பாதிக் கப்பட்டுள்ளன. 

தமிழகம் முழுவதும் இதுவரை 22 பேர் உயிரிழந்திருப்பதாகக் கூறப் படுகிறது. பலியானோர் குடும்பங் களுக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும். பாதிக் கப்பட்ட மக்களை முதல்வர் ஜெயலலிதா நேரில் சந்தித்து ஆறுதல் கூற வேண்டும். 

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்:
 
தமிழகம் முழுவதும் கடந்த சில நாள்களாக பெய்த மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர், விழுப்புரம் மாவட்ட ங்களில் சுமார் 1 லட்சம் ஏக்கரில் பயிர்கள் சேதமடைந் துள்ளன.

எனவே, நிவாரணப் பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட வேண்டும். சேதமடைந்த சாலைகள், பாலங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும். இறந்தவர்கள் குடும்பங் களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தசரசன்:
 
கடந்த மூன்று நாட்களாக பெய்த கன மழையால் கடலூர் மாவட்டம் பெரும் துயரத்தை சந்தித் துள்ளது. தமிழக அரசு நிவாரணப் பணிகளை விரைவுப் படுத்த வேண்டும். இறந்தவர்கள் குடும்பத்தி னருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். 

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவ ர்களும் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளனர். 
Tags: