ஏசியிலேயே இருந்தாலும் எலும்பு தேயும் !

இன்றைய வாழ்க்கை சூழலில் மனித உடலில் பிரச்னை களுக்குக் குறைவு இல்லை. உணவுப் பழக்கம், வேலை செய்யும் சூழல் என பல காரணங்களால் தலை முதல் கால் வரை நோய்கள்...
ஏசியிலேயே இருந்தாலும் எலும்பு தேயும் !
அவற்றில் மிக முக்கியமான எலும்புத் தேய்வு பாதிப்பு பற்றிப் பேசுகிறார் எலும்பு முறிவு மற்றும் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ஆர்.கிருஷ்ண மூர்த்தி.

நமது எலும்பு மண்டலத்தில் உள்ள தாதுச்சத்துகள், வைட்டமின், புரதம் மற்றும் இரும்புச் சத்து போன்றவை வயது ஆக ஆக குறையும்.
இதன் காரணமாக, எலும்புகள் தேய்வு அடைகின்றன. இவ்வாறு எலும்புகள் தேய்ந்து போவதை தான் மருத்துவ நிபுணர்கள் Osteoporosis எனக் குறிப்பிடுகின்றனர்.

பலரும் நினைத்துக் கொண்டிருப்பது போல, இது ஒரு நோயல்ல. எலும்பு தேய்வு என்பது வயதான காலத்தில் உடலில் உண்டாகுகிற ஒரு பாதிப்பே.

முதியவர்கள், உடல் உழைப்புக்கு வாய்ப்பு இல்லாமல் ஒரே இடத்தில் பல மணிநேரம் அமர்ந்தவாறு வேலை செய்பவர்கள்,

உடலில் வெயில் படுவதற்கான வாய்ப்பு இல்லாதவர்கள், வயிற்றுப் பிரச்னை காரணமாக பால் குடிக்கத் தயங்குபவர்கள், படுத்த படுக்கையாக இருப்பவர்க ள், புகைப்பழக்கம் உள்ளவர்கள்,
ஏசியிலேயே இருந்தாலும் எலும்பு தேயும் !
மது அருந்துபவர்கள், ஸ்டீராய்டு மாத்திரைகளை அதிகமாக சாப்பிடுபவர்கள், வலிப்பு நோய்க்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள், 

புற்று நோய்க்கு சிகிச்சை பெறுபவர்கள் என பல தரப்பினருக்கும் எலும்புத் தேய்வு வரக் கூடும். குறிப்பாக, இப்பாதிப்பு பெண்களையே அதிகம் தாக்கக்கூடும். 
முக்கியமாக, 50 வயது கடந்த பெண்களுக்கு ஹார்மோன்கள் மாறுபாடு காரணமாக மாதவிலக்கு நிற்கும் காலகட்டத்தில் எலும்புத் தேய்வு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பெண்களுக்கு மட்டுமல்ல... அனைவருக்குமே வைட்டமின் மற்றும் புரதக் குறைபாடு, உடற்பயிற்சிகள் செய்யாமல் இருத்தல், குளிர்சாதன வசதி உள்ள இடத்தில் வேலை செய்தல் போன்ற காரணங்களால் எலும்பு தேய்ந்து போகக் கூடும்.

முதியவர்களுக்கு வயது காரணமாக எலும்புகள் தேய தொடங்கும். அவர்கள் கீழே விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 
ஏசியிலேயே இருந்தாலும் எலும்பு தேயும் !
அவர்கள் பாதுகாப்புடன் நடந்து போவதற்காக வீட்டில் தேவையான இடங்களில் கைப்பிடிகள் பொருத்த வேண்டும். தேவையில்லாத தரை விரிப்புகளை அகற்றுவதும் நல்லது.
நமது உடலில் உள்ள எலும்புகள் தேய்வுக்கு உள்ளாகும் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன் அறிகுறிகள் எதுவும் கிடையாது. எலும்பு முழுவதும் தேய்வு அடைந்த பிறகு தான் அதற்கான அறிகுறிகள் கொஞ்ச கொஞ்சமாக வெளியே தெரிய ஆரம்பிக்கும்.

எலும்பு தேய்ந்து போனதற்கான அறிகுறிகள்
ஏசியிலேயே இருந்தாலும் எலும்பு தேயும் !
உடல் களைப்பு மற்றும் வலி, சிறிய அளவில் அடிபடுவதன் காரணமாக இடும்பு எலும்பு, முதுகெலும்பு ஆகியவற்றில் முறிவு (Fracture) ஏற்படுதல் ஆகியன எலும்பு தேய்ந்து போனதற்கான அறிகுறிகள் ஆகும்.

அறிந்து கொள்ளல்
ஏசியிலேயே இருந்தாலும் எலும்பு தேயும் !
ஒருவருக்கு எலும்பு தேய்வு அடைந்து உள்ளது என்பதை Dexa Scan, X-Ray எடுப்பதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். எலும்புத் தேய்வு மரபணு காரணமாக வருவது கிடையாது. 

இந்த பாதிப்பு வருவதைத் தடுக்க முடியும். ஆனால், முழுமையாக குணப்படுத்த முடியாது.எலும்புத் தேய்வுக்கு உள்ளாவதை சில சிகிச்சைகள் மூலம் கட்டுப் படுத்த லாம். 
இந்த சிகிச்சை முறைகள் எலும்புத் தேய்வால் பாதிக்கப் பட்டவரின் உடல் நிலையைப் பொறுத்து மாறுபடும். நடத்தல், யோகாசனம் செய்தல் போன்ற உடற் பயிற்சிகளுடன் உணவிலும் கவனமாக இருக்க வேண்டும்.

சத்துள்ள உணவு
ஏசியிலேயே இருந்தாலும் எலும்பு தேயும் !
காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றை உணவில் நிறைய சேர்த்துக் கொள்ள வேண்டும். கால்சியம், இரும்புச்சத்து அதிகம் உள்ள பிராக்கோலி சாப்பிடலாம்.

அன்றாட உணவுடன் தேவையான அளவு கால்சியம், புரதச்சத்து ஆகியவற் றையும் சரியான விகிதத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உணவில் அதிகம் உப்பு சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

 அசைவ உணவு
ஏசியிலேயே இருந்தாலும் எலும்பு தேயும் !
அசைவ உணவு வகைகளில் மீன், சிக்கன் சாப்பிடலாம். முட்டையில் மஞ்சள் கருவை தவிர்த்து விட்டு, வெள்ளைக்கரு மட்டும் உண்ணலாம். மஞ்சள் கருவில் கொழுப்பு அதிகம்.
கொழுப்பு அதிகம் உள்ள மட்டனையும் தவிர்ப்பது நல்லது. எலும்புத் தேய்வைக் கட்டுப் படுத்துவதற்கான இறுதிக் கட்ட சிகிச்சையில் எலும்பின் ஆற்றலை அதிகப்படுத்த வேண்டும்.

எலும்பு முறிவு அறுவை சிகிச்சை
ஏசியிலேயே இருந்தாலும் எலும்பு தேயும் !
இதற்காக ஆண்டுக்கு ஒரு முறை எலும்பு முறிவு மற்றும் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை மருத்துவரின் ஆலோச னைப்படி ஊசி போட்டுக் கொள்ளலாம். மாதவிலக்கு நிற்கும் கால கட்டத்தில் எலும்புத் தேய்வு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
Tags: