அதிக லாபம் தரும் சீட் கவர் தயாரிப்பு !

வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகனங்களின் சீட் கவர் தயாரித்து நேரடியாகவோ கடைகளுக்கோ விற்றால் லாபம் சம்பாதிக்கலாம்.
 


இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை பெருகி வருவதால், வாகனங்க ளில் சீட் கவர் மாற்றும் தேவை நிரந்தரமாக உள்ளது.

இருசக்கர வாகனங்கள் பிராண்ட் களுக்கேற்ப சீட்கள் ஒன்றுக்கொன்று சிறிய அளவில் மாற்றம் இருக்கும்.

பல்வேறு இரு சக்கர வாகன சீட்களின் மாதிரிகளை நாம் வைத்திருந்தால் உடனடியாக தயாரித்துவிடலாம்.

சீட் கவரில் வாடிக்கையாளர்கள் டிசைன்கள், எழுத்துகளை வடிவமைக்க விரும்புகின்றனர். டிசைன் வேலைப்பாட்டுக்கேற்ப கூலி கிடைக்கும். குறிப்பாக கல்லூரி மாணவர்கள் சீட் கவரில் டிசைன்களை விரும்புகிறார்கள். 

பெண்கள் டிசைன் இல்லாத சீட் கவர்களை விரும்புகின்றனர்.சீட் கவர் தயாரிக்க பெரிய அளவில் பயிற்சிகள் தேவை இல்லை. ஓரளவு தையல் தெரிந்தவர்களாக இருந்தால் போதும்.

இருசக்கர வாகன சீட் கவர் தயாரிப்பில் போதிய அனுபவம் இருந்தால் 4 சக்கர வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களுக்கு சீட் கவர் செய்து கொடுக்கலாம். நல்ல வருவாய் கிடைக்கும்.

இத்தொழிலை பெண்கள் வீட்டிலேயே செய்ய முடியும். மொத்த சீட் விற்பனை கடைகளில் ஆர்டர் எடுத்து செய்யலாம் அல்லது வெட்டி கொடுக்கும் பாகங்களை கொண்டு தைத்து கொடுக்கலாம். 

மழை, வெயிலில் நிறுத்தப்படுவதால், சீட் கவர்கள் அடிக்கடி கிழிந்து விடுகிறது. ஒரு சீட் கவர் 9 மாதம் வரை உழைக்கும். இதனால் நிரந்தர வேலை வாய்ப்பு உள்ளது.
 


இரு சக்கர வாகனத்துக்குரிய சீட்டின் மாதிரி வடிவத்தை வைத்து, சீட்டின் மேல், இடது மற்றும் வலது புற பாகங்களை ரோசிலின் சீட்டில் வெட்டி எடுத்து கொள்ள வேண்டும்.

அவற்றை பார்டர் டேப் அல்லது பீடிங் வயரால் இணைத்து தைக்க வேண் டும். 

அதை ஸ்பாஞ்ச் மீது வைத்து இடது, வலது புறங்கள் வழியாக கீழ் புறம் வரை கவரை இறுக்க மாக கொண்டு வரவேண் டும்.

இப்போது ரோசிலின் சீட்டை ஸ்பாஞ்ச் மீது கன் சூட்டரால் அமுக்கினால் சீட் கவர் தயார்.

டிசைன் சீட் கவர் தயாரிக்க, டிசைன் இடம்பெறும் பகுதிகளுக்கு புள்ளி ரெக்சின் சீட் அல்லது சிம்பொனி சீட்டை தேவையான வண்ணங்களில், டை மூலம் வெட்டி கொள்ள வேண்டும்.

அதற்கு வடிவமைப்பு இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும். வெட்டிய டிசைன்களை ஏற்கனவே தயாரித்த சீட்டில் இணைத்து தைக்க வேண்டும். 

(சீட் கவர் பொருத்துவதற்கு முன்பு, இரு சக்கர வாகனத்தில் இருந்து பழைய சீட்டை டூல் கிட் மூலம் கழற்ற வேண்டும். அதில் ஸ்பாஞ்சின் மீதுள்ள கவரை அகற்ற வேண்டும்.)

இரு சக்கர வாகன விற்பனை நிலையங்கள் மற்றும் சீட் கவர் மொத்த விற்பனை நிலையங்களுக்கும் ரெடிமேடு சீட் கவர்களை சப்ளை செய்யலாம். நல்ல கிராக்கி உள்ளது.
Tags: