எந்த மொழியும் தேசிய மொழியாக அறிவிக்கப் படவில்லை.. வைகோ !

இந்தியாவில் பேசப்படும் எந்த மொழியும் தேசிய மொழியாக அறிவிக்கப் படவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறி யுள்ளார்.


நடப்புக் கல்வியாண்டின் 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத் தகத்தின் 329 வது பக்கத்தில், இந்தியாவின் தேசிய மொழி எது என்று கேள்வி உள்ளது என்றும்,

ஆனால் பாடப் புத்தகத்தின் எந்த ஒரு பக்கத்திலும் இதற்கான எந்தவிதக் குறிப்புக் களும் இல்லை என்றும் வைகோ கூறியுள்ளார்.

குறிப்புக்கள் ஏதும் இல்லமால் வெறும் கேள்வி மட்டுமே கேட்கப்பட்டு உள்ளது என்றும், எனவே, இந்தக்கேள்வியை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

அவர் சுட்டிக்கான் பித்துள்ள அந்தப் பக்கத்தில் இந்தியாவின் தேசிய மொழி எது என்று கேள்வி எழுப்பி, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என்று வாய்ப்புக்கள் கொடுத்து ஒன்றைத் தேர்வு செய்ய கேட்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து இந்தியாவின் தேசிய மொழி என்று ஒரு மொழியும் இதுவரை அறிவிக்கப் படவில்லை என்றும், ஆங்கிலம், ஹிந்தி இரண்டு மொழிகளும் அரசு அலுவலக கையாளும் மொழிகள் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
Tags: