மூளையைக் கட்டுப்படுத்தும் கருவி !

மனித உணர்வுகள் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுவது தான் இயல்பானது. அப்படியான உணர்வுகளை செயற்கையாக உருவாக்கவும் வந்து விட்டது எலெக்ட்ரானிக் கருவி.
மூளையைக் கட்டுப்படுத்தும் கருவி !
நெற்றியில் ஒட்டிக் கொள்ளும் அளவுக்கு சிறிதாக உள்ள இந்த கருவி யின், இன்னொரு முனை பின்னங் கழுத்தில் தண்டு வடமும் தலைப் பகுதியும் இணையும் இடத்தில் ஒட்டி கொள்வது போல வடி வமைக்கப் பட்டுள்ளது.

செல்போனி லிருந்து செயலி மூலம் இந்த கருவியை இயக்க வேண்டும். பரபரப்பாக வேலை செய்து களைத்துப் போகிறோம், 

அந்த நேரத்தில் சுறுசுறுப் பாக இருப்ப தாக உணர வேண்டும் என்றால் செல்போனிலிருந்து கருவியை இயக்க வேண்டும்.

மூளையின் செல்களில் சுறுசுறு ப்புக்கான செயல் பாடுகளை இந்த கருவி தூண்டும். இதன் மூலம் அதே உற்சாகத் தோடு இருக்கலாம். அதேபோல ஓய்வை உணர வேண்டும் என்றாலும்
செயலியை இயக்கி மூளையின் செயல்களை அமைதியான நிலை க்குக் கொண்டு செல்லலாம். 

30 விநாடிகளில் மூளையின் செயல் பாடுகளை தூண்டுகிறது இந்த கருவி. ரசாயனம் மற்றும் மருந்துகள் உட்கொள்ள தேவை யில்லை. 

மருத்துவ ரீதியாக பயன்படும் என்றும் கூறியுள்ளது இதை தயாரித்துள்ள நிறுவனம். குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகோ 

அல்லது இந்த கருவியை அகற்றிய பிறகோ மீண்டும் பழைய மனநிலை க்கு புத்துணர்ச்சி யோடு திரும்பலாம். 
Tags: