உங்களுக்கு வைர நகைகள் வாங்க தெரியுமா?





உங்களுக்கு வைர நகைகள் வாங்க தெரியுமா?

Anonymous
By -
வைர நகைகளை வாங்கக் கூடியவர்கள் வைரத்தைப் பற்றி அறிந்திருக்கிறார்களா.? சமீப காலமாக வைரத்தின் விளம் பரங்களை நிறைய காண்கி றோம். 
உங்களுக்கு வைர நகைகள் வாங்க தெரியுமா?
வைரக்கல் மோதிரம், வைரத்தோடு, வைரநெக்லஸ் இப்படி வைரத்தில் நிறைய நகைகள் பலரை கவர்ந்து வருகிறது.
வைரத்தில் நகைகளை வாங்கக் கூடியவர்கள் வைரத்தைப் பற்றி அறிந்திருக் கிறார்களா.? என்றால் பலருக்கு அது சூனிய மாகவே இருக்கிறது. 

சாதாரண அமெரிக்கன் ஜர்கோன் கல்லையும் வைரக்க ல்லையும் காண்பித்து எது வைரம் என்றால் திணறிப் போவார்கள்.

இந்த அறியாமை பலரை ஏமாற வைக்கிறது.தங்கத்திலிருந்து இரண்டு மூன்று மடங்கு அதிகமான விலையில் வைர நகைகளின் விலைகள் இருக்கிறது.

சாலிடேர் ( Solitaire ) என்றால் என்ன ?
சாலிடேர் ( Solitaire ) என்றால் என்ன ?
சாலிடேர் என்பது ஒற்றை வைரத்தைக் குறிக்கும் ஆங்கில வார்த்தை, 33 சென்ட் மற்றும் அதற்கு அதிகமான எடையுள்ள வைரங்களைத் தான் சாலிடேர் என்று குறிப்பிடுவார்கள்.
மரத்தடியில் விளையாடிய போது 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி !
வைரத்திலும் தரம் இருக்கிறது அதற்கும் கேரட் இருக்கிறது.தங்கம் காப்பரின் அளவில் தரம் பிரிக்கப்படுகிறது. வைரம் அதன் நிறம் கட்டிங் எடை இவைகளில் தரம் பிரிக்கப்படுகிறது.

வைரத்தின் தரம்

விவிஎஸ்-1 (VVS-1)

விவிஎஸ்-2 (VVS-2)

விஸ்-1 (VS-1)

விஸ்2 (VS-2)

எஸ்ஐ-1 (SI-1)

எஸ்ஐ-2 (SI-2)

இது தரத்தின் பெயர்கள்.அதன் நிறத்தை சி (C) டி (D) இ (E) எப் (F) ஹச்(H) ஐ(I) என ஆங்கில அரிச்சுவடி வார்த்தைகளில் நிறத்தை நிர்ணயித்துள்ளார்கள்.
உங்களுக்கு வைர நகைகள் வாங்க தெரியுமா?
விவிஎஸ்-1(VVS-1) சி(C) நிறத்தில் உள்ள வைரம் விலை அதிகம். தரம் நிறைந்ததாகும். 

பெரும்பாலும் கடைகளில் விஎஸ்-2(VS-2) மற்றும் எஸ்ஐ-2(SI-2) இந்த ரக வைரங்களை மோதிரம், நெக்லஸ்சில் பொருத்தி விற்பனை செய்கிறார்கள்.
அழிந்து போன பாரம்பரிய விளையாட்டுகள் தெரியுமா?
விவிஎஸ்-1 (VVS-1)C நிறத்தின் ஒருகேரட் விலை $ 3500 அமெரிக்கன் டாலராகும்.

விஸ்-2 (VS-2)ஒருகேரட் $ 400 டாலராகும்.

ஒருகேரட் என்பதின் எடை 0.10 மில்லியாகும்.

போடிவைரக்கற்களை பதித்து அத்துடன் சில கலர் கற்களையும் பதிதத்து ஒரு நெக்லஸ் $ 5000 டாலர் என்று விற்பனை செய்வார்கள். 

தள்ளுபடி 25% அல்லது 50% சதவீதம் என்பார்கள். நாம் வாங்கிய சில மாதங்கள் கழித்து அதை விற்பனைக்கு கொடுத்தால் வைரத்திற்கு மதிப்புப்போட மாட்டார்கள். 

தங்கத்தின் எடைக்கு மட்டும் விலை நிர்ணயித்து அதற்கான தொகையை தருவார்கள். 
நமது உடலில் உப்புச் சத்து கூடி விட்டதா? - சோளம் சாப்பிடுங்கள் !
காரணம் வைரத்தின் தரம் எஸ்ஐ-2 என்ற குவாலிட்டியைச் சார்ந்தது. அதற்கு வாங்கும் போது மதிப்பிருக்கிறது. விற்கும் போது மதிப்பில்லை.

அதேநேரத்தில் விவிஎஸ்-1 அல்லது விவிஎஸ்-2 போன்ற வைரக்கற்கள் பதித்த நெக்லெஸ் வாங்கும் போது விலை அதிகம் . 

விற்கும் போதும் அதே விலை இல்லை யென்றாலும் 75 சதவீதம் அதனுடைய தொகை திரும்ப கிடைக்கும்.

விவிஎஸ் வைரங்கள் என்றால் என்ன ?
விவிஎஸ் வைரங்கள் என்றால் என்ன ?
விவிஎஸ் (VVS) என்றால் very very small inclusions என்கிற ஆங்கில வார்த்தையின் சுருக்கம். அதாவது மிகச் சிறிய, சாதாரணமாகக் கண்ணுக்குத் தெரியாத, லென்ஸை வைத்துப் பார்த்தால் மட்டுமே
இரவில் நடைப் பயிற்சி - என்ன நடக்கும் தெரியுமா?
தெரியக்கூடிய வைரத்தின் உள்ளேயே இணைந்து வளர்ந்துள்ள கனிம, அல்லது வேதிப் பொருளின் (மிகச்சிறிய) துகள்களோ, துணுக்குகளோ ஆகும்.

இதனால் வைரத்தின் ஜொலிப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. இது தவிர இன்னும் பெரிய துகள்களை VS1, VS2 என்பார்கள். 

அதன் உள்ளே உள்ள துகள்களின் அளவை பொறுத்து குறியீடுகளும் மாறிக் கொண்டே போகும்.

பூமியில் இருந்து எடுக்கப்படும் எல்லா வைரங்களும் நகை செய்யப் பயன்படுமா?
பூமியில் இருந்து எடுக்கப்படும் எல்லா வைரங்களும் நகை செய்யப் பயன்படுமா?
இல்லை. 40-50 சதவீதம் வைரங்கள் மட்டுமே நகை செய்யப்பயன்படும். 
மன அழுத்த அதிகமானால் முது வலி உண்டாகும் !
அவை 4Cs என்கிற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் தரம் குறைந்த மற்ற வைரங்கள் தொழிற்சாலை உபயோகத்திற்கு பயன்படும். இவை Industrial Diamonds எனப்படும்.

Industrial Diamonds – என்றால் என்ன ?

நகை செய்யப் பயன்படாத வைரங்கள் பலவித தொழிற்சாலை உபகரணங் களுக்கு பயன்படும். ஏனென்றால் அந்த வைரத்தின் தன்மை என்றுமே மாறாது.

அவை சாணைக் கல்லில் அடைப்புகளை நீக்கும் கருவிகள் (Dressing Tools), கண்ணாடிகள் வெட்டும் கைக்கருவிகள் (Glass Cutter), லேத்மெஷினில் 
ஸ்டீல் பாகங்களை வெட்டும் கருவிகள் (Cutting Tools), அறுவை சிகிச்சை செய்யும் கைக்கருவிகள் (Operation Instruments), இன்னும் பலவற்றில் உபயோகிக்கப் படுகிறது.

இதன் துகள்களை சாணைக் கல்லில் பதித்து வைரத்தை பட்டை தீட்ட பயன்படுத்தலாம். இப்படி பலவற்றில் பயன் படுத்தலாம்.

4Cs என்றால் என்ன?
4Cs என்றால் என்ன?
பல நாடுகளில் வைரங்களின் தரத்தைக் குறிப்பிட வெவ்வேறுவிதமான வார்த்தைகளை குறிப்பிட்டு வந்தார்கள். 
உலகளவில் ஒரே தர நிர்ணயம் செய்வதற்காக (நிமிகி) ஜெம்மாலஜிகல் இன்ஸ்டிடிட் ஆப் அமெரிக்கா 4சி என்கிற முறையை அறிமுகப்படுத்தியது. அது பின்வருமாறு.

1.CLARITY (தெளிவு)

வைரத்தை மேலிருந்து உள்ளே பரிசோதித்து பார்க்கும் போது ஏதேனும் வேதிப் பொருள்களோ கனிமப் பொருள்களோ உள்ளடங்கி இருக்கிறதா என்பதை பொறுத்து அதன் விலை நிர்ணயிக்கப்படும். 

அது எந்த விதத்திலாவது அதன் ஜொலிப்பை பாதித்தால் வைரத்தின் விலை குறையும்.

2. COLOUR (நிறம்)

வைரம் சுத்த வெள்ளையாக அதாவது நிறமற்றதாக (தெளிந்த நீரோடை போல்) இருந்தால் நல்ல தரமானது. நிறம் சற்றே மாறுபட்டு 
கர்ப்ப கால நீரிழிவு நோய் யாருக்கு வருகிறது?
கொஞ்சம் பழுப்பு நிறம் அல்லது மஞ்சள் நிறம் கொண்டதாக இருந்தால் தரம் குறைவாகும். தெளிவான கற்களே சிறந்தவை.

3. CAROT (எடை)

100 சென்ட் = 1 கேரட் இது வைரத்தின் எடையை குறிக்கிறது. வைரக் கல்லின் எடையை பொறுத்து அதன் விலை நிர்ண யிக்கப்படும்.

4. CUT (பட்டை தீட்டப்பட்டுள்ள முறை)
4. CUT (பட்டை தீட்டப்பட்டுள்ள முறை)
வைரக்கல் எந்த முறையில் பட்டை தீட்டப்பட்டுள்ளதோ அதை பொறுத்து விலை நிர்ணயிக்கப் படும். பட்டை சரியாக தீட்டப் படாமல் இருந்தால் வைரத்தின் விலை குறைந்து விடும். 
இந்த நான்கு C க்கள் (4 Cs ) வைரம் தேர்வு செய்வதற்கான அடிப்படையாகும்.

தங்கக் கேரட் வைரக் கேரட் இரண்டும் ஒன்றுதானா ?

வைரத்தில் கேரட் (CAROT) என்கிற வார்த்தை அதன் எடையைக் குறிக்கும். தங்கத்தில் கேரட்(Karatage) என்கிற வார்த்தை தங்கத்தின் தரத்தைக் குறிக்கும். 

உ.ம் 24 கேரட் என்றால் 100$ சுத்தத் தங்கம் அதே 24 கேரட் வைரம் என்பது அதன் எடையைக் குறிக்கும் இரண்டும் வேறு வேறு பொருள் (Meaning) கொண்டவை.

வைரத்தில் `ரத்தப்பந்து` என்றால் என்ன?

வைரம் வளரும் போது ஆயிரத்தில் ஏதாவது ஒரு கல்லில் அதனோடு சேர்ந்து சிவப்பு நிறத்தில் (மாதுளம் பழத்தின் முத்து நிறத்தில்) கார்னெட் (Garnet) என்கிற ஒருவகை ரத்தின கல்லும் சேர்ந்தே வளரும். 

வைரத்தை பட்டை தீட்டிய பிறகு இந்த சிவப்பு நிறம் நன்றாக தெரியும். இதை நம் ஊர் வியாபாரிகள் `ரத்தப்பந்து` என்பார்கள்.

டீபியர்ஸ் (De Beers) வைரங்கள் என்றால் என்ன?
டீபியர்ஸ் (De Beers) வைரங்கள் என்றால் என்ன?
1876ம் ஆண்டு ஜோஹன்னாஸ் டீபியர்ஸ் மற்றும் ஆர்ணால்டஸ் டீபியர்ஸ் சகோதரர்களுக்கு சொந்தமான பண்ணை நிலத்தில் ஏராளமான வைரங்கள் கிடைத்தன. 
ஆப்பிரிக்காவில் இந்த இடத்தை ஸெஸில் ரோட்ஸ் (Cecil Rhodes) என்பவர் வாங்கி வைரங்களை தோண்டி எடுத்து பெரும் செல்வந்தர் ஆனார்.

அந்த நிறுவனத்துக்கு டீபியர்ஸ் மைனிங் கம்பெனி என்று பெயரிட்டார். இது 1880 ஆண்டு மார்ச் மாதம் 12ம் தேதி துவங்கப் பட்டது. 

இன்று உலக வைர வியாபாரத்தில் 75சதவீதத்திற்கும் மேலாக இந்த நிறுவனம் தன் கட்டுப் பாட்டில் வைத்துள்ளது.
இதில் ஆச்சரியமான தகவல் என்ன வென்றால் De Beers சகோதரர்கள் இங்கிருந்து வைரங்கள் கண்டு பிடிப்பதற்கு முன்பாகவே இந்த நிலத்தை சுமார் 500 டாலருக்கு விற்றுவிட்டு வேறு இடத்திற்கு சென்று விட்டார்கள்.

ஹார்ட்ஸ் ஆரோஸ் வைரம் (Hearts and Arrows Diamonds) என்றால் என்ன?
ஹார்ட்ஸ் ஆரோஸ் வைரம் (Hearts and Arrows Diamonds) என்றால் என்ன?
சிறந்த பொறியியல் நுணுக்கத்துடன் ஒவ்வொரு பட்டையையும் குறிப்பிட்ட விகிதத்தில் சிறப்பாக தீட்டப்பட்ட வைரத்தை டைமண்ட் ஸ்கோப் என்ற 

கருவியின் மூலமாக பார்த்தால், அதனுள்ளே இருதயம் போலவும், அம்பு போலவும் துல்லியமாகத் தெரியும்.
இந்த வைரங்கள் அதிக ஜொலிப்புடன் விளங்கும் அதைத்தான் மேற்கண்டவாறு குறிப்பிடுக்கிறோம்.
Tags: