சத்துமாவு தயாரிப்பது எப்ப‍டி? - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

Flash News

சத்துமாவு தயாரிப்பது எப்ப‍டி?

பேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...
சத்துமாவு குழந்தை களுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம். முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.


6 மாதம் கெடாது

சத்துமாவு காய வைத்து, வறுத்து அரைக்கப் படுவதால் 6 மாதம் வரை கெடாது. பொதுவாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 கிராம் வரை பயன் படுத்தினால் 

ஒரு கிலோ பாக்கெட் 20 நாளில் தீர்ந்து விடும். இதனால், கெட்டு விடுமோ என்ற கவலையும் தேவை யில்லை.

உற்பத்தி செலவு:


தயாரிக்க எடுத்த 15 கிலோ தானியங் களுக்கான செலவு ரூ.740. அரவை கூலி கிலோ ரூ.4 வீதம் ரூ.60. 1 ஆள் கூலி ரூ.150, ஒரு நாள் உற்பத்தி செலவு ரூ.950. மாதத்தில் 25 நாள் உற்பத்தி செலவு ரூ.23,750, விற்பனை தொடர்பான இதர செலவுகள் மாதம் ரூ.1,250. மொத்த மாத செலவு ரூ.25,000.

வருவாய்:

15 கிலோ தானியங்களை காயவைத்து அரைத்தால் 12 கிலோ சத்து மாவு கிடைக்கும். ஒரு கிலோ ரூ.120 வீதம் விற்கலாம். இதன் மூலம் ஒரு நாளைக்கு வருவாய் ரூ.1,440. 25 நாளில் வருவாய் ரூ.36,000. செலவு போக லாபம் ரூ.11,000.

சந்தை வாய்ப்பு :


பலசரக்கு கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், காதி, சர்வோதய விற்பனை நிலையங்களுக்கு சப்ளை செய்யலாம். 

சத்துமாவை தற்போது மக்கள் விரும்பி வாங்கு கிறார்கள். குழந்தை களுக்கு ஏற்ற உணவு என்பதால் விற்பனை வாய்ப்புக்கு பஞ்சமில்லை.

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close